
About Me &
My Academy

ஒரு மனிதனைப் பற்றி ஏதேனும் கூற வேண்டுமெனில், இந்த உலக வாழ்வின் அவன் என்ன மாதிரியான நோக்கங்களைக் கொண்டிருக்கின்றான் என்பதைத்தான் முதன்மையாக கூற வேண்டும். மனிதர்களின் நோக்கங்களும், அந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, அவர்கள் என்ன மாதிரியான கருவிகளை, வழிமுறைகளைக் கையாளுகிறார்கள் என்பதும் தான் மனிதர்களின் வாழ்வின் தன்மைகளை வடிவமைக்கின்றது. அந்த வகையிலே, அருண் சி.ஜா ஆகிய நான், இந்த உலக வாழ்வில் என்னுடைய நோக்கத்தைப் பற்றி இறைவன் சாட்சியாக இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.
உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான ஞானங்களைக் கொண்டு, ஒவ்வொரு மனிதரும், அர்த்தம் நிறைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும், அதற்கு நான் ஒரு வழிகாட்டியாக, உதவியாளனாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கின்றது. எனது இந்த விருப்பத்தையே எனது வாழ்வின் நோக்கமாகவும் நான் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன். எனது கல்வி, எனது தொழில் ஆகியவற்றையும் எனது விருப்பத்தை சார்ந்ததாகவே இறைவன் அமைத்துத் தந்திருக்கின்றான்.
யோகம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் முதுகலைப் பட்டம், அக்குபங்சர் சிகிச்சை முறை பற்றிய பட்டயப் படிப்புகள், யோக சிகிச்சை குறித்த சர்வதேச சான்றிதழ் படிப்பு போன்ற பல முக்கிய கற்றல்கள் எனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான தளத்தை அமைத்துக்கொள்ள பெரும் உதவி புரிந்தன.
2014 ஆம் ஆண்டு முதல், ஒரு யோகப் பயிற்சியாளராக எனது தொழில் வாழ்க்கை தொடங்கியது. பின் அக்குபங்சர் சிகிச்சையளிப்பதில் எனது விருப்பம் மேலோங்க, அதில் நான் என்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டேன். ஒரு அக்குபங்சர் சிகிச்சையாளராக பல்வேறு மனிதர்களை சந்தித்தது, அவர்களோடு அவர்களின் நோய்த்தன்மைகள் குறித்து உரையாடியதும், அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களை வழங்கி, அதில் அவர்கள் அடைந்த நன்மையான சுகங்களும் எனக்கு மகிழ்ச்சியையும், இன்னுமின்னும் இத்துறையில் ஆழமாக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தையும் தந்தன.
ஒரு மருத்துவ ஆலோசகராக எனக்கு கிடைத்த கணிசமான அனுபவங்களின் அடிப்படையில் ஒரு முக்கியமான புரிதலை, நான் மிக ஆழமாக உணர்ந்து கொண்டேன். அது, மனிதனின் மனம் தான் அவனது நோய்களுக்கும் துன்பங்களுக்கும் இன்னும் பல்வேறு சுகவீனங்களுக்கும் காரணமாக அமைகின்றது. இதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பது தான்.
மனம் தான் மனிதனின் மையம். மனம் என்ற அந்த மையத்தளத்தில் வேலை செய்து, அதனை செம்மைப்படுத்தாத வரை, மனிதர்களின் நோய்களுக்கு நிச்சயமாக நிரந்தர நிவாரணம் கிடையாது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்டேன். அதோடு, ஒரு மனித மனம் செம்மைப்பட வேண்டுமெனில், அம்மனமானது, இறைவனை நோக்கித் திரும்பினால் தவிர வேறு வழியே இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
எனது மனமும் படைப்பாளனாம் இறைவனை நோக்கித் திரும்ப ஆரம்பித்தது. இறைவன் எனக்கு நேர் வழி காட்டுவதை நான் உணர்ந்தேன். அப்போது முதல் தான், யோகம் மற்றும் அக்குபங்சர் சிகிச்சை உள்ளிட்ட இயற்கை மருத்துவ வழிமுறைகளோடு சேர்த்து, இறைவழி தியானம் என்ற ஒரு புதிய ஆன்மிக வாழ்வியல் வழிமுறையையும் நான் மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினேன். இதனால் ஏற்பட்ட மாற்றம் இன்னுமின்னும் எனது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கியது.
விபஸ்ஸனா தியான முறையின் கோட்பாடுகள், மரபுவழி அக்குபங்சர் மருத்துவ முறையின் கோட்பாடுகள், இந்திய மரபுவழி யோக வழிமுறைகள், உணவியல் கோட்பாடுகள் மற்றும் இயற்கை மருத்துவ வழிமுறைகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய கற்பித்தல் தொகுப்பை உருவாக்கி, இறைவழி தியானம் என்ற பெயரில் அவற்றை மக்களுக்குப் பயிற்றுவிக்க ஆரம்பித்தேன்.
பல்வேறு இணைய வழி வகுப்புகள், நேரடி வகுப்புகள், பட்டயப்படிப்புகள், விழிப்புணர்வு வகுப்புகள், யூ டியூப் காணொளிகள் போன்ற பல்வேறு வழிமுறைகளில் நான் இறைவழி தியானத்தை இன்று வரை பல்வேறு மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றேன். இந்தக் கற்பித்தல் செயல்முறைகள் அனைத்தையும் 'அருண் சி.ஜா அகாடமி' மூலமாக செய்துவருகின்றேன்.
நிறைநல வாழ்வியலுக்கான 'அருண் சி.ஜா அகாடமி' என்ற எனது கல்வி நிறுவனத்தின் நோக்கம், முதலில் நான் குறிப்பிட்ட எனது வாழ்வின் நோக்கம் தான். உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் வாழ்க்கையைப் பற்றிய தெளிவான ஞானங்களைக் கொண்டு, ஒவ்வொரு மனிதரும், அர்த்தம் நிறைந்த ஒரு வாழ்வை வாழ வேண்டும், அதற்கு நான் ஒரு வழிகாட்டியாக, உதவியாளனாக இருக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். அதனையே நான் எனது கல்வி நிறுவனத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றேன்.
இறைவன் நமக்கு நேர்வவழியை தெளிவாக்கட்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அருண் சி.ஜா
நிறைநல வாழ்வியல் ஆலோசகர், தியான பயிற்சியாளர்
To truly understand a person, we must look at the intentions that guide their life. Our goals—and how we strive to achieve them—ultimately shape who we are.
With that in mind, I, Arun C.J., share my life’s purpose: to help individuals lead meaningful lives through physical health, mental peace, and clear understanding of life. I see myself as a guide and companion on this journey, and I have embraced this as the core mission of my life. I believe it is by divine design that my education and career have aligned with this calling.
My academic foundation includes a Master’s in Yoga and Naturopathy, professional certifications in Acupuncture therapy, and an International Diploma in Yoga Therapy. These qualifications have helped me build a strong base to serve people in their journey toward well-being.
In 2014, I began my professional path as a Yoga instructor, which later led to a deep interest in Acupuncture. This passion grew into a full-time practice. Working with a wide range of individuals, listening to their health concerns, offering medical guidance, and witnessing the transformation in their lives gave me not only fulfillment but a stronger commitment to this field.
Over the years, I came to an important realization: the human mind plays a central role in health, suffering, and healing. Without addressing the root—the mind—true and lasting recovery is impossible. And for the mind to truly heal and transform, it must turn toward the Divine.
As my own inner journey deepened, I began to feel God’s guidance more clearly. This led me to develop and teach a unique spiritual wellness approach called “Iraivazhi Dhyānam”—a path that blends spiritual meditation with natural healing.
By integrating principles from Vipassana, traditional acupuncture systems, Indian yogic sciences, dietary wisdom, and naturopathy, I created a holistic teaching framework under the name Iraivazhi Dhyānam. Since then, I’ve been sharing this approach through online programs, live workshops, certificate courses, awareness sessions, and YouTube videos, all under the banner of Arun C.J. Academy.
The core mission of my academy reflects my personal vision: to help people discover a meaningful life through health, peace, and clarity. Through this academy, I continue to walk in alignment with that vision, serving as a guide to those seeking wholeness.
May the Divine illuminate the right path for us all. To God be all the glory.
— Arun C.J.
Founder, Arun C.J. Academy of Holistic Health






