top of page
  • Facebook
  • Instagram
  • YouTube

The Morning Prayer

This is the morning prayer recited during the Divine Meditation Sessions. Each morning of us should be shaped with divine awareness and with a conscious reaffirmation of the will and feelings granted to us by God. The lines of this morning prayer, recited in the Divine Meditation Sessions, are filled with divine sentiments, and anyone who reads them with awareness can deeply experience this truth.

காலைப் பிரார்த்தனை


அகிலங்களின் இறைவனே!

அனைத்துப் பெருமைகளும் போற்றுதல்களும்

உன் ஒருவனுக்கே உரியது.


அனைத்தின் ஆதாரமும் நீ!

அனைத்தின் தொடக்கமும் நீ!

அனைத்தின் முடிவுகளும் உன்னிடமே!

உன்னுடைய அருட்கொடையாம் இந்த நாளை

உன்னுடைய திருப்பெயரால் நான் தொடங்குகின்றேன்.


எனது அறிவின் மற்றும் அறியாமையின் தீங்குகளிலிருந்து

உன்னிடமே நான் பாதுகாவல் வேண்டுகின்றேன்.

எனது பெருமை மற்றும் பொறாமையின் தீங்குகளிலிருந்து

உன்னிடமே நான் பாதுகாவல் வேண்டுகின்றேன்.

உலகத்தின் பொருள் மயக்கங்களும்

என் மன இச்சைகளின் கெட்ட நோக்கங்களும்

உன்னுடைய பொருத்தத்தை விட்டும்

என்னை விலக்கி விடாமல் இருக்க

உன்னிடமே உறுதியாக நான் பாதுகாவல் வேண்டுகின்றேன்.


இன்னும், எனது தவறுகள் மற்றும் பாவங்களுக்காக

உன்னிடமே நான் மன்னிப்பை வேண்டுகின்றேன்.

மன்னிப்பவனே! என்னை மன்னிப்பாயாக!

நேர் வழியில் என்னை நிலைத்திருக்கச்செய்வாயாக!


உன்னுடைய அருளைக் கொண்டும்,

கருணையைக் கொண்டும்,

உன்புறமிருந்து நற்குணங்களைக் கொண்டும்,

ஞானங்களைக் கொண்டும்

என்றென்றும் என்னை நீ வழி நடத்துவாயாக!


நீ என்னுடன் எப்போதும் இருந்து கொண்டிருப்பதை

என்னை எப்போதும் உணர்ந்திருக்கச்செய்வாயாக!

எனது எண்ணங்களிலும், பார்வையிலும்,

பேச்சுக்களிலும், செயல்களிலும்

பொறுமையைக் கொண்டும், நன்மைகளைக் கொண்டும்

எனக்கு வழிகாட்டுவாயாக!

எனக்காக நீ நாடியிருக்கும் நன்மைகளை தவறாது

நான் அடைந்து கொள்ள எனக்கு நீ உதவி செய்வாயாக!


நீயே என் இறைவன்.

நீயே என்னுடைய பொறுப்பாளன்.

நீயே என் இறைஞ்சுதலைச் செவியேற்பவன்.

செவியேற்பவனே! படைப்பாளனே!

புதிய படைப்பாக என்னை ஆக்கித் தருவாயாக!

புதிய வாழ்க்கையில் என்னை வாழ வைப்பாயாக!


அமைதியும் சமாதானமும்

ஆரோக்கியமும் ஞானங்களும்

நன்மைகளும் மேன்மைகளும்

குளிர்ச்சியும் கதகதப்பும்

சோலைகளும் நீரோடைகளும் 

தூய உணவுகளும் உறவுகளும் நிறைந்த

புத்தம் புதிய வாழ்க்கையை

உன்னைக்கொண்டு நான் விரும்புகின்றேன்!


விருப்பங்களை அளிப்பவனே!

ஏற்றுக் கொண்டேன் இறைவனே!

புதிய வாழ்க்கையில் என்னை வாழச் செய்வாயாக!

புதிய படைப்பாய் என்னை ஆக்கித் தருவாயாக!

உன்னுடைய அருட்கொடையாம் இந்த நாளை

உன்னுடைய திருப்பெயரால் நான் தொடங்குகின்றேன்!

பெருமைகளும் புகழ்களும் உன் ஒருவனுக்கே!



இறைவழி தியான வகுப்புகள் குறிந்து அறிந்து கொள்ள கொள்ள

8939298988 / 8939294031


 
 
 

Comments


bottom of page